இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடியில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் விதவிதமான போராட்டத்தில் ஈடுபடும் அவர்கள் இன்று நூதன முறையில் வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடத்தினர். அதில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஒரே நேரத்தில் இந்தியன் வங்கிக் கிளையின் முன் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.