போலீஸில் இருப்பவர் வீட்டிலேயே இப்படி நடந்ததா? கன்னியாகுமரியில் அதிர்ச்சி..
கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளமடத்தில் உள்ள காவல்துறை உதவி ஆய்வாளரான ஸ்டான்லி ஜோன் வீட்டில், பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 4 கைக்கடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
