கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.
கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை
Published on

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர். புற்றுக்கண் வீரமாட்சியம்மன் கோயிலில் இருந்த உண்டியலை முகமூடி அணிந்த இருவர் தூக்கிச்சென்று, அருகிலிருந்த வயல்வெளியில் வைத்து உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கைரேகைகள் மற்றும் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com