ஆர்.கே.செல்வமணி மீது பண மோசடி புகார் - பரபரப்பில் திரையுலகம்
திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செலவமணி மீது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் உறுப்பினராக இருப்பவர் அக்னி ஆழ்வார். இவர் திரைப்பட இயக்குனரும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி , பல கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவில், பண மாலை அணிந்தபடி, விசாரணைக்கு ஆஜரான அக்னி ஆழ்வார், படப்பிடிப்பு தளங்கள் கட்டிக் கொள்ள வழங்கப்பட்ட பணத்தில் ஆர்.கே.செல்வமணி கையாடல் செய்திருப்பதாக தெரிவித்தார்.
Next Story
