Ex ஊராட்சி தலைவர்... சிறையில் இருக்கிறாரா?ஹாஸ்பிடலில் இருக்கிறாரா? - CBCID-க்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு

x

பண மோசடி வழக்கில் சரணடைந்த சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா ஆள்மாறாட்டம் செய்து இருபது கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார்குடியைச் சேர்ந்த ரோஸ்லின் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால், சிபிசிஐடி போலிசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ரோஸ்லின் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமுதா மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமுதா சரணடைந்தது முதல் தற்போது வரை சிறையில் இருக்கிறாரா? அல்லது மருத்துவமனையில் இருக்கிறாரா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்