மொஹரம் பண்டிகை - நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று 'துவா' ஓதினர். முகமது நபியின் பேரன் இமாம் ஹசர் உசைன், கர்பலா நகரில் நடைபெற்ற போரில் இறந்த நாளை தியாக திருநாளாகவும், ஹிஜ்ரி வருடப்பிறப்பை மொஹரம் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில், புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில், மொஹரம் சிறப்பு துவா நடைபெற்றது. இதையடுத்து மர்சியா எனும் இமாம் ஹசர் உசைன் வரலாற்றை வாசித்து, துவா ஓதியபடி, கால்மாட்டு வாசல் மற்றும் பீர்ரோடும் தெரு வழியாக ஊர்வலமாக சென்று கடற்கரையில் அமைந்துள்ள சில்லடி தர்கா சென்றடைந்தனர். தொடர்ந்து தர்காவிற்கு வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story