மக்கள் நலனில் அக்கறையற்ற மோடி அரசு; ரூ.13,450 கோடியில் கட்டிடம் தேவையா..? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்கள் நலனில் அக்கறையற்று, பிரதமர் மோடி தனக்காக 13 ஆயிரத்து 450 கோடி ரூபாயில் புதிய மஹாலை கட்டி வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மக்கள் நலனில் அக்கறையற்ற மோடி அரசு; ரூ.13,450 கோடியில் கட்டிடம் தேவையா..? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி
Published on

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்கள் நலனில் அக்கறையற்று, பிரதமர் மோடி தனக்காக 13 ஆயிரத்து 450 கோடி ரூபாயில் புதிய மஹாலை கட்டி வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கொண்டு 45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் எனவும், ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 40 மெகா கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை கட்ட முடியும் எனவும் தனது பதிவில் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com