செல்போன் திருட்டு - சிக்கிய இருவர்... சொன்ன பரபரப்பு வாக்குமூலம்

x

சென்னையில், எழும்பூர் பகுதியில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களிடமிருந்து செல்போன்கள் திருடப்படுவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்தன. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சுரேஷ் ராஜ் மற்றும் செல்போன் கடைக்காரர் காசிம் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் சேர்ந்து 19 செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்