சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஹோட்டலில், தொடங்கிய இந்த கூட்டம், இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்றைய தினம் 3 அமர்வுகளாக சுமார் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரசார யுக்திகள், வரக்கூடிய நாட்களில் எந்தெந்த பணிகளை முன்னெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்பது குறித்தும் கமல்ஹாசன் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்க இருக்கிறார்.