MLA| kanchipuram| tigerdance| புலியாட்டம் ஆடி அசத்திய MLA, ஆச்சரியத்தில் வியந்து பார்த்த மாணவர்கள்..

x

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளும் பங்கேற்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் கலை திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார அளவிலான அரசு பள்ளிகளில் பயிலும் 800 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை திருவிழா போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கலைத் திருவிழாவை தொடங்கி வைக்க வந்த காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசனுக்கு புலி வேடம் அணிந்த அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் புலியாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பள்ளி மாணவர்களின் ஆட்டத்திற்கு எதிராக எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசனும் புலி ஆட்டம் ஆடி வரவேற்பினை ஏற்றார்.

யாரும் எதிர்பாராத வகையில் எம்எல்ஏ புலியாட்டம் ஆடி அசத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் பள்ளி மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கலைத் திருவிழாவை தொடங்கி வைத்த நிலையில் பள்ளி மாணவர்கள் பசுமையும் பாரம்பரியம் எனும் தலைப்பில் முன்னிறுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார் முதன்மை கல்வி அலுவலர் நளினி மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்