exam முடித்த கையோடு கிளாஸ் ரூமில் பட்டாசு வெடித்த மாணவன்- திருத்தணியில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பள்ளி வகுப்பறையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மாணவர் காயமடைந்தார். கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவர், நெடியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு பெற இருப்பதைக் கொண்டாடுவதாக, அறிவியல் பாடத்தேர்வை முடித்த கையோடு, தனது பையில் மறைத்து வைத்திருந்த பட்டாசை எடுத்து, வகுப்பறைக்குள் தன் கையில் வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது, பட்டாசு கையிலேயே வெடித்தது. இதில், வலது கையில் காயமடைந்த மாணவர், திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக அறிவியல் பாடத் தேர்வு எஞ்சியிருந்த நிலையில், மாணவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது...
Next Story