Kallakurichi | MLA வழக்கு - போனிலேயே வெடித்த வாக்குவாதம்.. பெண் அதிகாரி ரகசிய வாக்குமூலம்

MLA வழக்கு - போனிலேயே வெடித்த வாக்குவாதம்.. பெண் அதிகாரி ரகசிய வாக்குமூலம்

Kallakurichi | MLA வழக்கு - போனிலேயே வெடித்த வாக்குவாதம்.. பெண் அதிகாரி ரகசிய வாக்குமூலம் #kallakurichi #mla #thanthitv கள்ளக்குறிச்சியில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் மீதான வழக்கில், பெண் மாவட்ட அதிகாரி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். காலை உணவுத் திட்டப் பணியாளர் நியமனம் தொடர்பாக எம்எல்ஏவுக்கும், பெண் அதிகாரிக்கும் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், வசந்தம் கார்த்திக்கேயன் மீது தியாகதுருகம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதிபதி பானுமதி முன்பு, இன்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் பெண் அதிகாரி ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணியளவில் பெண் அதிகாரி பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

X