ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்
Published on

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களுக்கும், திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலின் சரியான எதிர்ப்பைக் காட்டி வருவதாக வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். ஸ்டாலினுக்கு தரப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com