"வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல,மரணமும் நமக்கு பாடம்தான்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த காங்கிரஸ் எம்.பி, வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல அவரின் மரணமும் நமக்கு பாடம்தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல,மரணமும் நமக்கு பாடம்தான்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
Published on

மறைந்த காங்கிரஸ் எம்.பி, வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல அவரின் மரணமும் நமக்கு பாடம்தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலமாக ஹெச்.வசந்தகுமாருக்கு நினைவு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொரோனாவுக்கு தடுப்பூசியோ மருந்தோ இல்லை என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கை கழுவ வேண்டும் என நமக்கு அறிவுரை சொல்லிவிட்டு மத்திய - மாநில அரசுகள் நாட்டை கை கழுவி விட்டன என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com