

மறைந்த குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவர் உடல், நேற்று சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் சென்று, மாலை மணிவித்து அஞ்சலி செலுத்தினார்.