MK Stalin | Modi | மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம்

x

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு அக்கறையோடு செயல்பட்டு வருவதாக கூறினார். மத்திய அரசு தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்