சிஏஏ போராட்ட களத்தில் ஸ்டாலின்

சென்னை மண்ணடியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சிஏஏ போராட்ட களத்தில் ஸ்டாலின்
Published on
மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் 27ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் அவர்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், முன்கூட்டியே நான் வந்திருப்பேன், ஆனால் திமுக தூண்டிவிட்டு போராட்டம் நடப்பதாக கூறுவார்கள் என்பதால் தான் வரவில்லை என்று கூறினார். மேலும், குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களை மட்டும் அல்லாது அனைவரையும் பாதிக்கும் என தெரிவித்தார். போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் ஏப்ரல் 1ஆம் தேதி நடக்கும் கணக்கெடுப்பில் யாரும் பங்கேற்க வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com