"மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்" - ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் மக்கள், வணிகர்கள் கடும் அவதிப் படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் மக்கள், வணிகர்கள் கடும் அவதிப் படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இதயவர்மனை ஆதரித்து மாம்பாக்கத்தில் பிரசாரம் செய்த அவர், எட்டு வழிச்சாலையை எதிர்க்கும் பா.ம.க, அந்த திட்டத்தை ஆதரிக்கும் பா.ஜ.க கூட்டணியில் இருப்பதாக விமர்சித்தார். வேறுபட்ட கொள்கை கொண்ட கட்சிகள், அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைத்திருப்பதாக ஸ்டாலின் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com