ஸ்டாலின் வருகைக்காக வைத்திருந்த பேனர் அகற்றம் - அதிமுக, திமுக இடையே மோதல்

விழுப்புரத்தில் ஸ்டாலின் வருகைக்காக வைத்திருந்த பேனர் அகற்றப்பட்டதால், திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஸ்டாலின் வருகைக்காக வைத்திருந்த பேனர் அகற்றம் - அதிமுக, திமுக இடையே மோதல்
Published on
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அதிமுக விளம்பரத்தை மறைத்து திமுக சார்பாக, ஸ்டாலின் வருகைக்காக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை, அதிமுகவினர் அகற்றியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக விளம்பரத்தை சுண்ணாம்பு பூசி அழிக்க முயன்றுள்ளனர். இதனால், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அனுமதி இல்லாமல் எழுதப்பட்டுள்ள அதிமுக விளம்பரத்தை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து உடனே அழிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிப்பதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com