ஜெ.மரணம்;யாரும் தப்ப முடியாது - ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெ.மரணம்;யாரும் தப்ப முடியாது - ஸ்டாலின் உறுதி
Published on

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து, "ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்" இடையே நான்கு வருடங்களாக ஒரு நாடகம், பல பாகங்களாக அரங்கேறி வருவதாக கூறி உள்ளார். அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் மீது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி வைத்த குற்றச்சாட்டு, விசாரணையை முடக்கி வைத்திருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார். விசாரணைக் கமிஷனை பெயருக்காக அமைத்து, பதவி சுகத்தை முன்னிறுத்தி, ஒரு முதலமைச்சரின் மரணத்தில் உள்ள சதியை மறைக்க, அரசியல் விளையாட்டு நடத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் உறுதிபடக் கூறி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com