ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த நாட்டை, ஒற்றைத்தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? என்றும், இந்தியாவை, 'ஹிந்தி-யா'வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா? என்று ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.