"மருத்துவர்களின் இறப்பை மறைக்காதீர்கள்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் இறந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு, தலா 50 லட்சம் நிதி வழங்க வேமண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
"மருத்துவர்களின் இறப்பை மறைக்காதீர்கள்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Published on

கொரோனா தடுப்புப் பணியில் இறந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு, தலா 50 லட்சம் நிதி வழங்க வேமண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரோனா தொற்றுக்கு 43 மருத்துவர்கள் தமிழகத்தில் இறந்துள்ளார்கள்" என்று ஏற்கனவே இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்தபோது அதை எள்ளி நகையாடியவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று கூறியுள்ளார். அந்த தகவல் ஆதாரமற்றது வதந்தி என்று அமைச்சர்

பத்திரிகையாளர்களிடம் அப்பட்டமாகப் பொய் சொன்னதாக தெரிவித்துள்ளார். இப்போது 47 மருத்துவர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்து என்ன மாதிரியான பொய்யை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லப் போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவர்கள் மரணம் குறித்த கணக்கை வெளியிட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவச உடைகளை அளித்துக் காப்பாற்ற முன்வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com