மு.க. முத்து மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் இரங்கல்

முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈபிஎஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மு.க. முத்து உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரர் மு.க.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com