MK Azhagiri Daughter Issue| மு.க.அழகிரி மகளை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

MK Azhagiri Daughter Issue| மு.க.அழகிரி மகளைகைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு - அழகிரியின் மகளை கைது செய்து விசாரணை எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.... சென்னை பெசன்ட் நகரில் உள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கிக் கிளை வாடகைக்கு இயங்கி வருகிறது... இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட், பழுது காரணமாக செயல்படாமல் இருப்பது குறித்து வங்கி மேலாளர் கயல்விழியிடம் புகார் அளித்துள்ளார்... ஆனால் லிஃப்ட் பழுது சரிசெய்யப்பட வில்லை என கூறப்படுகிறது... இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வங்கி மேலாளரின் கன்னத்தில் கயல்விழி அறைந்துள்ளார்... வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில், சாஸ்திரி நகர் போலீசார் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்தனர்... இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்..... 3 மணிநேர விசாரணைக்கு பிறகு, காவல்நிலைய ஜாமினில் கயல்விழி விடுவிக்கப்பட்டார்

X

Thanthi TV
www.thanthitv.com