பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி
Published on
பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்று மற்றும் 2ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இந்த தவறு நேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மீதிமுள்ள 8 வகுப்புகளுக்கு, மாற்றம் செய்யப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் தவறாக அச்சாகி உள்ளது. பாடப்புத்தகங்களை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இந்த தவறை சரிசெய்து, புதிய புத்தகங்களை அச்சடித்து, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்று, ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com