40 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்த காணாமல் போன மகன் - உறைந்து பார்த்த உறவினர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கதிர் நரசிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் - ருக்குமணி தம்பதியின் மூத்தமகனான குமார், 12 வயதாக இருக்கும் போது தனது பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இந்தியாவின் பல ஊர்களுக்கு சென்று கிடைக்கிற கூலி வேலையை செய்து வந்த குமார், மலேசியாவிற்கும் சென்று சில காலம் வேலை செய்து வந்திருக்கிறார். இறுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் வேலை செய்த குமார் , தனது முதலாளியின் மகளையே திருமணம் செய்து இரண்டு மகள்களுக்கு தந்தையாகியிருக்கிறார். இந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்த குமார் தனது குடும்பத்தை சந்தித்திருக்கிறார். குமாரின் தந்தை இறந்து விட்ட விலையில், மகனைப் பார்த்த தாய் ருக்மணி, பாட்டி, தம்பி என அனைவரும் நெகிழ்சியோடு நலம் விசாரித்துக் கொண்டனர்.
Next Story
