முகநூல் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த மன நோயாளி

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மன நோயாளி ஒருவர் முகநூலின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
முகநூல் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த மன நோயாளி
Published on

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காளவாய்ப்பொட்டல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்-கலாவதி தம்பதியின் மகன் முத்துப்பாண்டி. 35 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றபோது மாயமானதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் முத்துப்பாண்டி கிடைக்காத‌தால், குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

* இந்நிலையில் புதுக்கோட்டையில் சுற்றித்திரிந்த முத்துப்பாண்டியை மீட்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அவரை இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளது. அவர்கள் கொடுத்த சிகிச்சையின் உதவியால், முத்துப்பாண்டி சிறிது குணமடைந்து, தனது குடும்பம் குறித்த சில விவரங்களை கூறியுள்ளார். அவற்றை தனியார் தொண்டு நிறுவனம் முகநூலில் பதிவேற்றம் செய்த நிலையில், அதனை கண்ட முத்துபாண்டியின் உறவினர்கள் அவரை மீட்டுள்ளனர். மன நோயாளியை 2 ஆண்டுகள் பராமரித்து குடும்பத்துடன் சேர்த்துவைத்த தனியார் தொண்டு நிறுவனத்துக்கு, டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் பாராட்டு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com