3 மாதங்களுக்கு முன் மாயமான நபர் - எலும்பு கூடாக மீட்பு

ரிஷிவந்தியம் அருகே 3 மாதங்களுக்கு முன் மாயமான நபர் , எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 மாதங்களுக்கு முன் மாயமான நபர் - எலும்பு கூடாக மீட்பு
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே சிறுபனையூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடை அருகே மனித எலும்பு கூடு மீட்கப்பட்டது. அருகே கிடந்த லுங்கி, டிஷர்ட் துணிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட திருப்பாலந்தல் போலீசார், இறந்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாயமான கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பதை கண்டுபிடித்தனர். அவரது மரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com