பிரஸ்மீட்டில் மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | MISKIN | PRESS MEET

கோவிலுக்கு செல்லாதீர்கள் என தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் மற்றும் கனிஷ்கா நடிக்கும் ஹிட் லிஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன், மிஷ்கின், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய மிஷ்கின், கோழைகளின் வார்த்தைகளை நம்ப வேண்டாம் எனப் பேசினார். தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், 150 வயது வரை நடிப்பேன் என உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com