ரிதன்யா விவகாரத்தில் நொடிக்கு நொடி பரபரப்பு..நொறுங்கிய மனதுடன் DGP ஆபீஸ் விரைந்த தந்தை

x

ரிதன்யா தற்கொலை வழக்கு - டிஜிபி அலுவலகத்தில் புகார்

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளை சேர்த்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்ட குடும்பத்தினர், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணை தாமதமாக நடைபெற்று வருவதால், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்