``தமிழ்நாடு No.1..'' - ஸ்விஸ் மண்ணில் அசத்திய அமைச்சர் TRB ராஜா | Minister TRBRajaa
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். குறிப்பாக மின்சார கார் உற்பத்தியில் இந்தியாவிலேயே 40 சதவீதம் தமிழகத்தில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே 70 சதவீதம் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். வேலைக்கு செல்லும் பெண்கள் விகிதம் 43%ஆக தமிழகத்தில் உள்ள நிலையில், நாட்டில் முன்னணியில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்தியாவில் 25% முன்னணி கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளது என குறிப்பிட்டார்.
Next Story
