ஓட்டுநர்களுக்கு சர்ப்ரைஸ்.. தங்கம், வெள்ளி என வாரி இறைத்த அமைச்சர் | Minister Sivasankar

ஓட்டுநர்களுக்கு சர்ப்ரைஸ்.. தங்கம், வெள்ளி என வாரி இறைத்த அமைச்சர் | Minister Sivasankar
Published on

தென்காசியில் 11 புதிய பேருந்துகளை துவக்கி வைத்து விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கி பாராட்டினார்... தென்காசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 25 வருடம் விபத்து இல்லாமல் பணியாற்றிய 2 பேருக்கு தங்க நாணயம் மற்றும் 10 வருடம் விபத்தில்லாமல் பணியாற்றிய 43 பேருக்கு வெள்ளி நாணயங்களைப் பரிசாக வழங்கி பாராட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடம் பக்தர்கள் சிரமம் இன்றி சென்று வர அதிக பேருந்துகள் இயக்கும் வண்ணம் தமிழக அரசு சார்பாக கேரள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com