

சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கம்பு சண்டை, கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தபட்டன. அதில் இளைஞர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் விளையாடி மகிழ்ந்தனர்.