நோ பார்க்கிங்-கில் நின்ற அமைச்சர் கார்-"எல்லாருக்கும் ஒரே ரூல் தான்" - கொத்தாக தூக்கிய உ.பி. போலீஸ்
நோ பார்க்கிங்-கில் நின்ற அமைச்சர் கார் - "எல்லாருக்கும் ஒரே ரூல் தான்" - கொத்தாக தூக்கிய உ.பி. போலீஸ்
உத்தரப்பிரதேச சட்டசபை வளாகத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் கார், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கூட்டத் தொடரில் பங்கேற்க சட்ட சபைக்கு வந்த மாநில மீன்வள துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், தனது காரை, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். இதனால், சட்டசபை வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், சஞ்சய் நிஷாத்தின் காரை, கிரேன் மூலம் தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
Next Story
