Sivakasi | Minister White | சிவகாசியில் மினிஸ்டர் ஒயிட்டின் 75-வது கிளை திறப்பு

சிவகாசியில் மினிஸ்டர் ஒயிட்டின் 75-வது கிளை திறப்பு

Sivakasi | Minister White | சிவகாசியில் மினிஸ்டர் ஒயிட்டின் 75-வது கிளை திறப்பு

#sivakasi #ministerwhite #thanthitv

சிவகாசியில் மினிஸ்டர் ஒயிட்டின் 75-வது கிளை திறப்பு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 74 கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஆண்களுக்கான பாரம்பரிய ஆடை நிறுவனமான மினிஸ்டர் ஒயிட், தனது 75-வது விற்பனை நிலையத்தை சிவகாசியில் தொடங்கியுள்ளது. சிவகாசி காந்தி சாலையில் அமைந்திருக்கும் புதிய ஷோரூமுக்கு சிவாச்சாரியார் மணிகண்டன் தலைமையில் லட்சுமி பூஜை மற்றும் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் போத்திராஜ், அவரது மனைவி வசந்தி போத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்ததுடன், முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தனர். இந்த புதிய ஷோரூமில் வேஷ்டி, சட்டைகள், பஞ்சகச்சம், ரெடிமேட் மற்றும் ரெடி-டூ-வேர் வேஷ்டிகள், திருமண ஆடைகள், உயர்தரத் துணிகள், உள்ளாடைகள் மற்றும் பல்வேறு துணைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com