"அரசின் உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கண்காணிப்பில் உள்ளவர்கள் அரசின் உத்தரவை மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..
"அரசின் உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
Published on

கண்காணிப்பில் உள்ளவர்கள் அரசின் உத்தரவை மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், சுகாதார துறையால் கண்காணிக்கப்படும் பயணிகள் சிலர் அரசின் உத்தரவுகளை மீறுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற செயல்களால் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படும் பயணிகளின் பட்டியல், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், உத்தரவை மீறுவதாக தகவல் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com