வருமான வரி தொடர்பான வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு மீது உத்தரவு

சேகர் ரெட்டி உள்பட 7 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி தொடர்பான வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு மீது உத்தரவு
Published on

சேகர் ரெட்டி உள்பட 7 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிராக திரட்டப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமான வரித்துறையிடம் இருந்து பெற்று தரவும், அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், குறுக்கு விசாரணை முடியும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com