"அதிமுக அரசின் சாதனைகள் கண்டு ஸ்டாலின் பொறாமை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கண்டு பொறாமைத் தீயில் வெந்து போய் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வெறுப்பை அள்ளி வீசுவதாக, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அதிமுக அரசின் சாதனைகள் கண்டு ஸ்டாலின் பொறாமை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
Published on

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நாளில் ஆட்சி கலைந்து விடும் என்று ஆசை கோட்டை கட்டியிருந்த ஸ்டாலின், ஆயிரம் ஆண்டுகள் நிலை பெறும் அரசாக அ.தி.மு.க. அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கி அறிக்கை விடுவதாக தெரிவித்துள்ளார். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. பங்கு வகித்திருந்த போது, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தரவில்லை என்று அவர் குறை கூறியுள்ளார். எது நடந்தாலும் அதில் அரசியல் ஆதாயம் தேட என்ன வழி என்ற சிந்தனையில் இருந்து வெளிவந்தால் தான் பொது வாழ்வில் இருப்பவர்கள் தலைவர்களாக முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com