தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் மூலமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.