அமைச்சர் வேலுமணி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு - தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை கைது

அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அமைச்சர் வேலுமணி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு - தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை கைது
Published on

அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் வழக்கு பதிவு செய்த போலீசாரிடம், கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்த வழக்கில்,தென்றல் செல்வராஜ் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், தி.மு.க ஒன்றியசெயலாளர் துரையை, கைது செய்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 50 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது . இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com