கோவை, அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்தினார். தனியார் நிறுவனத்தின் சார்பில், கோவை அரசு மருதுவமனைக்கு சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்பில் அதிநவீன வென்டிலேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின்
செயல்பாட்டை தொடங்கி வைத்த அமைச்சர். பின்னர் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்து அங்கு தயாராகி இருந்த மதிய உணவை சாப்பிட்டார்.