தி.நகருக்கு செல்வதை மக்கள் தவிருங்கள் - அமைச்சர் வேலுமணி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவலை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். முன்னதாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் வேலுமணி தலைமையில் கொரோனா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தி.நகர் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com