விமானநிலைய விரிவாக்கத்திற்கு பிறகு ஐ.டி.நிறுவனங்கள் பெருகும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார்.
விமானநிலைய விரிவாக்கத்திற்கு பிறகு ஐ.டி.நிறுவனங்கள் பெருகும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், ஐ.டி நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் உருவாகும் என்றும் அதனால் லட்சகணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், என்றார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, விரிவாக்கத்திற்கு நிலம் அளிப்பவர்களுக்கு, வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டு, வீடு கொடுப்பவர்களுக்கு புதியாக நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளதாக, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com