

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சி மன்றங்கள் மற்றும் 528 பேரூராட்சி மன்றங்களுக்கு, 76 கோடி ரூபாயில், கபடி, கைப்பந்து கிரிக்கெட் விளையாட்டு பொருட்கள் வழங்கி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், முதிர்வுற்ற பத்திரங்கள் வழங்கும் விழாவில், 223 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்ட விளையாட்டுகளை, விளையாடுவதற்கான இடங்ளை தேர்வு செய்து, அதற்கான பொருட்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.