Minister Sarathkumar | TVK | சீரியஸ்மோடில் களத்தில் இறங்கிய அமைச்சர் சரத்குமார்-பறந்த அதிரடி உத்தரவு
கால்வாய் பணிகளை உடனடியாக தொடங்க அமைச்சர் சரத்குமார் உத்தரவு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் டிடிகே நகர் பகுதியில் எட்டு மாதமாக நடைபெறாமல் இருந்த மூடு கால்வாய் பணிகளை உடனடியாக தொடங்க அமைச்சர் சரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.... தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான சரத்குமார் வானியன் குட்டை பகுதியில் ஆய்வு செய்தார்.... அப்போது, மூடு கால்வாய் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி 4 வாரத்திற்குள் முடிக்க நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் கால்வாய் பணிகளுக்காக முடிச்சூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.... ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
