

விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதில், ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில், அமைச்சர் ஆர். பி. உதயகுமாரை சந்தித்தனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர், களத்துக்கு வந்து விட்டால் எதிரிகளை வீழ்த்துவதில், ஒன்றிணைந்து அம்மாவின் பிள்ளைகளாக வெல்வோம் என்றார். இதைத் தொடர்ந்து, கலை இலக்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆர்.பி. உதயகுமாரை வாழ்த்தி நடனத்துடன் பாட்டுபாடி மகிழ்ந்தனர்.