

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூரில் அமைச்சர் பாண்டியராஜன், ஆய்வு செய்தார். அப்போது அவர், தண்டையார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று சித்தா பொட்டலங்களை வழங்க இருப்பதாக கூறினார்.