

கொரோனாவால் பாதிப்படைந்த தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து தொழில் முதலீட்டாளர்கள் உடன் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கடலூர் சிப்காட் மற்றும் சிட்கோ பகுதிகளில் தொழிற்சாலைகள் வைத்துள்ளவர்கள், மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். அப்போது மீண்டும் தொழில் துறை மேம்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
\