"தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான நடவடிக்கை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
"தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான நடவடிக்கை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
Published on

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறும் பட்சத்தில் அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com