சென்னை ராயபுரத்தில் எம்எல்ஏ நிதியில் இருந்து 97 லட்சம் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் லாரிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் பங்கேற்று, சர்வதேச அளவில் குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற கலைவாணிக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது, குத்துச் சண்டை சாம்பியன் கலைவாணியுடன் அமைச்சர் ஜெயக்குமார் குத்துச்சண்டை பயிற்சி செய்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.